கிருபாசனம் ஆ! தோன்றிடுதே
தருண மேதும் எங்கிலும் நல்ல
சகாயம் பெற்றிட ஏற்றதுவே.
கல்வாரியினின்றும் பாய்ந்திடுதே
என்னுள்ளம் நன்றியால் பொங்கி வழியுதே
என்ன என் பாக்கியமிதே - கிருபை
நாதனோர் பாவமும் அற்றவராய்
நாளும் நம் குறைகள் கண்டுருகும்
நல்ல ஆசாரியர் நமக்குண்டே - கிருபை
நல்கிடுவார் பரிபூரணமாய்
நாடுவோமே மாறாக் கிருபையை
நமக்காயே அவர் ஜீவிப்பதால் - கிருபை
தானே சென்ற இயேசுவாமெமது
மா பிரதான ஆசாரியரை
பற்றிடுவோம் நோக்கி நம்பிக்கையை - கிருபை
சதா பரிந்து பேசியே நிற்போர்
இதோ எம்மையே முற்றுமுடிய
இரட்சிக்க வல்லமையுள்ளவரே - கிருபை