கடுங்காயப்பட்ட நேசரைக் கண்டேன்
ஆஹா! பாரத்தால் நான் பணிந்து நின்றேன்
மகனே இது உனக்காய் என்றார்
எந்தன் மகா இன்பராம் என் இயேசு வரும் நாளதினிலே
கனி தா என்று கனிவாய் சொன்னார்
இனி தாமதமோ நாதா என்றேன்
தொனி கேட்குங்காலம் சமீபம் என்றார் - ஆஹா
கல்வாரி அன்பை விளம்பிடுவேன்
முடி சூடி என்றும் ஆளுகை செய்வேன் - ஆஹா
தங்கி தாபரிக்கும் காட்சி கண்டேன்
வந்த உபத்ரவத்தில் நிலைத்தோர் என்றார் - ஆஹா
துயர் நீங்கும் பின் மறுகணம்
துங்கன் இயேசுவின் தூயப் பிரசன்னம்
தங்க மாளிகையில் எங்கும் ஜொலிக்கும் - ஆஹா