சர்வ வல்ல இயேசு என்னை இரட்சித்தார்
பேரன்பு பொங்க என்றும் பாடுவேன்
ஆண்டவர் சமூகம் என்னைத் தேற்றுதே
துன்பங்கள் யாவுமே இன்பமாய் மாறுதே
இன்ப இயேசு நாமத்தில்
போன ஆண்டு என்னை கர்த்தர் தாங்கினார்
சோர்ந்தழியாமல் என்றும் காத்ததால் - ஆர்ப்பரித்து
இரட்சகர் என் பாவம் முற்றும் மன்னித்தார்
மாதேவ அன்பில் என்னைக் காத்ததால் - ஆர்ப்பரித்து
ஆரவாரத்தோடே இயேசு தோன்றுவார்
ஆயத்தமாய் நான் காத்து நிற்பதால் - ஆர்ப்பரித்து
சீக்கிரம் வந்தென்னை சேர்த்துக் கொள்ளுவார்
பொன் மாளிகை நான் கிட்டிச் சேர்வதால் - ஆர்ப்பரித்து