சாய்ந்திளைப்பாறிடுவேன் - ஆ
சிலுவையின் அன்பின் மறைவில்
கிருபையின் இனிய நிழலில்
அடைகிறேன் ஆறுதல் மனதில் - சிலுவை
தளர்ந்த தென் ஜீவியமே - ஆ
சிலுவையண்டை வந்ததினால்
சிறந்த சந்தோஷங்கண்டதினால்
ஏகுவேன் பறந்தே வேகம் - சிலுவை
இயேசுவை சார்ந்து நிற்பேன் - ஆ
அவனியில் வியாகுலம் வந்தால்
அவரையே நான் அண்டிக் கொண்டால்
ஆறுதல் அளிப்பதாய் சொன்னார் - சிலுவை
இன்னல்கள் மறந்திடுவேன் - ஆ
திருமறை இன்னிசை நாதம்
தேனிலுமினிய வேதம்
தீர்க்கு மென் இதயத்தின் தோஷம் - சிலுவை