சிறப்போடு நிற்கிறவள் யாரோ?
தன் மீட்பரை சாற்றுபவள் யாரோ?
ஓயாமல் போற்றுபவள் தானே.
காத்தருக்கேற்றவள் இவளாய்
அவள் காதல் எந்நாளும் அவர் மேலே
கற்புடையவளே பாரில் - சீயோன்
ஆடைப் பிரகாசமாய் அணிந்தாள்
தன் காதலன் இரத்தத்திலே தோய்த்தாள்
தன் தேவன் நாமமே நெற்றியில் தோணுதே
அவ்வலங்காரமே ஆஹா! - சீயோன்
மன்னன் அழைக்கும் தொனியோடே
மிக மாண்புடனே வாழ்ந்திடுவாள் அவளே
வா என் மணாளியே எனபார் அந்நாளியே
செல்லுவேன் நானுமே ஆமேன் - சீயோன்