ஜீவப் பாதையிலே நடத்தும்
ஜீவத் தண்ணீர் ஊறும் ஊற்றிலே
ஜீவன் பெற என்னை நடத்தும்
இயேசுவே நீர் பரிசுத்தர்
இயேசுவே நீர் நல்லவர்
இயேசுவே நீர் வல்லவர்
பாவ ஆதாம் மக்களே தூயா
பாதகர் எம் பாவம் போக்கவே
பாதகன் போல் தொங்கினீரல்லோ - இயேசுவே
ஐந்துகாயமேற்ற நேசரே
நொந்துருகி வந்து மக்கள் மேல்
நேச ஆவி வீச செய்குவீர் - இயேசுவே
வாக்குமாறா உண்மை நாதரே
வாக்கை நம்பி வந்து நிற்கிறோம்
வல்ல ஆவி மாரி ஊற்றுவீர் - இயேசுவே
நேசர் வர காலமாகுதே
மாயலோகம் நம்பி மாண்டிடும்
மானிடரை மீட்க மாட்டீரோ - இயேசுவே