தேவ குமாரன் மரித்தெழுந்தார்
பாவங்கள் போக்க பாவியை மீட்க
பலியான இயேசு உயிர்த்தெழுந்தார்
அல்லேலூயா ! கிறிஸ்துயிர்த்தார்
அல்லேலூயா ! கல்லறைக் காட்சி
அற்புத சாட்சியே
ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்தார்
வேதாளக் கூட்டம் நடுங்கிடவே
அன்றதிகாலை மா இருள் வேளை
மன்னாதி மன்னன் உயிர்த்தெழுந்தார் - அல்லேலூயா
நம் கிறிஸ்தேசு பரிசுத்தரே
சாவை ஜெயித்து சாட்சி அளித்து
சொன்னபடியே உயிர்த்தெழுந்தார் - அல்லேலூயா
பூலோக மெங்கும் சாற்றிடுவோம்
எம் மனஜோதி தம் அருள் ஆவி
எம் உள்ளம் ஊற்ற உயிர்த்தெழுந்தார் - அல்லேலூயா
நம்பிடுவோரை எழுப்பிடுவார்
எக்காள சத்தம் கேட்டிட நாமும்
ஏகுவோம் மேலே ஜெயித்தெழுந்தே - அல்லேலூயா