ஜெயம் தந்தீரையா
தள்ளாட விடவில்லையே
தாங்கியே நடத்தினீரே
புயல் இன்று ஓய்ந்தது
புதுராகம் பிறந்தது
நன்றி அப்பா நல்லவரே
இன்றும் என்றும் வல்லவரே
கரம் பிடித்தீரையா
விண்ணப்பம் கேட்டீரையா
விடுதலை தந்தீரையா
இதுவரை உதவினீரே
எல்ரோயீ நீர்தானையா
என்னையும் கண்டீரையா
உம்மையே நம்பி உள்ளேன்
பூரண சமாதானரே
போதுமே உம் சமூகமே