கிருபை நிறை இயேசுவே
தமதன்பை கண்டடைந்தேன்
தேவ சமுகத்திலே
களைத்தோரைத் தேற்றிடுமே
சிலுவை நிழல் எந்தன் தஞ்சம்
சுகமாய் அங்கு தங்கிடுவேன் - திருப்பாதம்
இன்னல் துன்ப நேரத்திலும்
கருத்தாய் விசாரித்து என்றும்
கனிவோ டென்னை நோக்கிடுமே - திருப்பாதம்
மன வேண்டுதல் கேட்டிடும்
எனதுள்ளம் ஊற்றி ஜெபித்தே
இயேசுவே உம்மை அண்டிடுவேன் - திருப்பாதம்
என்ன நிந்தை நேரிடினும்
உமக்காக யாவும் சகிப்பேன்
உமது பெலன் ஈந்திடுமே - திருப்பாதம்
உண்மையாய் வெட்கம் அடையேன்
தமது முகப் பிரகாசம்
தினமும் என்னில் வீசிடுதே - திருப்பாதம்
நித்தமும் கிரியை செய்திடும்
என்னைத் தேற்றிடும் அடையாளம்
இயேசுவே இன்று காட்டிடுமே - திருப்பாதம்
வீர பாதை காட்டினீரே
வளர்ந்து கனிதரும் வாழ்வை
விரும்பி வரம் வேண்டுகிறேன் - திருப்பாதம்
பரம சீயோன் மீதிலே
பிரகாசிக்கும் அதை நோக்கி
பதறாமலே காத்திருப்பேன் - திருப்பாதம்