நேயமாய் நம்மை நடத்தினாரே
ஓயா புகழுடன் கீதம் பாடி தினம்
போற்றியே பணிந்திடுவோம் - அல்லேலூயா
கனிவுடன் நம்மை அரவணைத்தே
நிறுத்தியே நிதம் நம்மை வழிநடத்தும் - தூய
இயேசுவின் பெலன்கொண்டு கடந்து வந்தோம்
பரிசுத்த பாதையில் நடந்திடுவோம் - தூய
திரும்பவும் வால வயதாகும்
புது நன்மையால் புது பெலத்தால்
நிரம்பியே நம் வாயும் திருப்தியாகும் - தூய
தாசராம் நமக்குமே தந்திடுவார்
எலிசாவைப் போல் இரு மடங்கு
வல்லமையால் நம்மை அபிஷேகிப்பார் - தூய
கர்த்தரின் அருள் என்றும் நிறுத்தியதே
கண்மணிபோல் கடைசிவரை
காத்திடும் கர்த்தரை போற்றிடுவோம் - தூய