தேவ சந்தோஷமும் நிறைவாயே
தேவாசீர்வாதங்கள் தங்கிடவே
தேவன் அருள் ஈவாரே
அன்புடன் உன்னை அணைக்கின்றதே
வல்லமை உன் மீதில் பாய்ந்திடவே கர்த்தர்
வலங்கை நீட்டுகிறார் - தேவ சமாதானம்
இன்றைக்கும் உன் இயேசு மாறிடாரே
கலங்காதே திகையாதே உன் உள்ளமே
கர்த்தர் துணை நிற்கின்றார் - தேவ சமாதானம்
தேவகுமாரன் உன்னோடிருப்பார்
உன்மேல் தம் கண் வைத்து ஆலோசனைத் தந்து
உன்னை நடத்திடுவார் - தேவ சமாதானம்
கர்த்தரின் கற்பனை கைக்கொள்வாயே
ஊழியம் செய்குவாயே - தேவ சமாதானம்
நித்திய ஜீவனும் பெற்றிடவே
பக்தர்கள் பந்தியில் பங்கடைந்திடவே
பரன் தயை புரிவார் - தேவ சமாதானம்
வாடாத கிருபை ஈந்திடுமே
கிருபை கிருபை என்றென்று முள்ளதே
கர்த்தனை வாழ்த்திடுவோம் - தேவ சமாதானம்