சபையில் தேவன் எழுந்தருள
ஒரு மனதோடு அவர் நாமத்தை
துதிகள் செலுத்தி போற்றிடுவோம்
அல்லேலூயா கர்த்தருக்கே
அல்லேலூயா பரிசுத்தருக்கே
அல்லேலூயா இராஜனுக்கே
எங்கள் நடைகளை ஸ்திரப்படுத்தும்
கண்மணி போலக் காத்தருளும்
கிருபையால் நிதம் வழி நடத்தும் - அல்
சகாயம் பெற்று வாழ்ந்திடுவோம்
சாகும் வரையில் உழைத்திடுவோம் - அல்
நன்மை கிருபை தொடர்ந்திடவே
வேத வசனம் கீழ்ப்படிவோம்
தேவ சாயலாய் மாறிடுவோம் - அல்
இயேசு மேகத்தில் வந்திடுவார்
நாமும் அவருடன் சேர்ந்திடவே
நம்மை ஆயத்தமாக்கிக் கொள்வோம் - அல்