நண்பனே நீ பயப்படாதே
படைத்தவர் உன்னை நடத்திச் செல்வார்
அனைத்தையும் செய்து முடித்துவிட்டார்
தழும்புகளால் நீ சுகமானாய்
தயவினால் மறுபடி பிறந்துவிட்டார்
அறிக்கை செய்து சுகமடைந்தாள்
ஒருத்துளி சந்தேகமில்லாமலே
ஓடிவா இயேசு இன்று சுகம் தருவார்
ஆற்றல் பொற்றது நம்பிக்கையினால்
ஏக்கமெல்லாம் எப்படியும் நிறைவேற்றுவார் - உன்
கடலைக் கடந்தனர் நம்பிக்கையினால்
எரிகோ மதில்கள் விழுந்தனவே
ஏழுநாள் ஊர்வலம் வந்ததினால்
உனக்குள் இருப்பவர் பெரியவரே
துணை நின்று உனக்காய் யுத்தம் செய்வார்
துரிதமாய் வெற்றி காணச் செய்வார்
என்று சொன்னால் நடந்திடுமே
உன்னாலே கூடாதது ஒன்றுமில்லையே
நம்பினால் எல்லாம் நடந்திடுமே
நலமுடன் வாழ்ந்து ஜெயம் எடுப்போம்
படைத்தவர் நம்மை நடத்தி செல்வார்