- Song Book:
Spiritual Songs of Joy
ஆவிக்குரிய சந்தோஷக் கீதங்கள்
நம்முடைய தெய்வம் இயேசுவல்லால் இந்த
நானிலத்தில் வேறு தெய்வமில்லை
கர்த்தரை தெய்வமாய் கொண்ட ஜனம்
பாக்கியமுள்ளது எனப்படுமாம் - நம்
பாவமறியாத பரிசுத்தராம் - இயேசு
பாவிகள் இரட்சிக்க வந்தவராம் - நம்
கற்சிலை பேசுமோ வாய்திறந்து - நம்
கர்த்தர் இயேசு இன்றும் ஜீவிக்கிறார் - நம்
பற்பல கிருபைகள் பகருகின்றார் - நாம்
கற்புடன் அவர் பணி செய்திடவே - நம்
மறப்பாளோ தாய் தன் பாலகனை நான்
மறப்பதில்லை என்னும் அன்பு தெய்வம் - நம்
ஏறெடுக்கும் நம் தேவைகட்டு - அவர்
மாறாமல் பதில் தரும் மகிபனவர் - நம்
சகலமும் படைத்த சர்வாதிகாரி இயேசு
சகலமும் ஜெயித்திட்ட பரிகாரி - நம்