ஆர்ப்பரிப்பேனே அகமகிழ்ந்தே
கர்த்தர் நீர் செய்த நன்மைகளையே
நித்தம் நித்தம் நான் நினைப்பேனே!
எண்ணற்ற நன்மையால் நிறைப்பவரே
பாசத்தால் உம்பாதம் பற்றிடுவேனே
- ஆ அடைக்கலமே
சுத்தரே, உம் செயல்கள் மகத்துவமானதே
பக்தரின் பேரின்ப பாக்கியம் இதே
- ஆ அடைக்கலமே
கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுபவரே
நம்பி வந்தோனைக் கிருபை சூழ்ந்து கொள்ளுமே
- ஆ அடைக்கலமே
கூப்பிட்ட என்னைக் குணமாக்கினீரல்லோ
அழுகையைக் களிப்பாக மாற்றிவிட்டீரே
- ஆ அடைக்கலமே
சாபங்களை நீக்கிச் சுத்த உள்ளம் தந்தீரே
உற்சாக ஆவி என்னைத் தாங்கச் செய்தீரே
- ஆ அடைக்கலமே