இன்பமாக அவர் பாதையோட
தாமே வழியும், சத்தியமும், ஜீவனுமே
அன்பரறியாமல் வந்திடாதே
'கண்விழிபோல் நான் காத்திடுவேன்' என்றனரே
மோசமடையாய் நீ முற்றிலுமே
ஏங்கிடாதே நீ - நேசர் அதில் தோன்றுவாரே
வியாகுலம் உன்னை விரட்டிடினும்
ஆ! நேசரே தம் இன்ப சத்தம் ஈந்திடுவார்
உந்தனுக்காய் கஷ்டப் பட்டிட்டாரே
துன்ப மூலமாய் எய்திடுவாய் இன்பக்கானான்
பன்னிரு சிஷர் பாதம் கழுவி
பாவ உலகில் இஷ்டமில்லை சாய்ந்திடவே
அன்பில் இணைத்தாரே வல்லமையால்
உந்தன் ஜீவனை மற்றோருக்காய் ஈந்திடவே
மாய்ந்தழியும் இம்மாந்தரன்பு
நேற்று மின்றென்றும் மாறாதவர் நேசர்தானே
வஞ்சிக்குமே உனைத் தந்திரமாய்
வாஞ்சித்திடாதே மோசமான இப்பார் தலத்தை