அனைத்து உயிர்களே பாடுங்கள்
கர்த்தாதி கர்த்தர் வாழ்க வாழ்க
எப்போதும் இருப்பவர் வாழ்க வாழ்க
இனிமேலும் வருபவர் வாழ்க வாழ்க
ஆராதனை செய்யுங்கள்
ஆனந்த சத்தத்தோடே
திருமுன் வாருங்கள்
இப்போது துதியுங்கள்
வீணையுடன் யாழ் இசைத்து
வேந்தனை துதியுங்கள்
வாசலில் நுழையுங்கள்
அவர் நாமம் உயர்த்திடுங்கள்
ஸ்தோத்திர பலியிடுங்கள்
நேசரை துதியுங்கள்
சுவாசமுள்ள யாவருமே
இயேசுவை துதியுங்கள்
கிருபை உள்ளவரே
நம்பத்தக்கவர் தலைமுறைக்கும்
என்றென்றும் நம்பத்தக்கவர்
என்று முழங்கிடுங்கள்
அவர் நமக்காய் ஜீவன் தந்தார்
அவரின் ஆடுகள் நாம்
நாதனை துதியுங்கள்
மத்தளத்தோடும் குழல் ஊதி
சப்தமாய் துதியுங்கள்