மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும்
அல்லேலூயா கூட்டத்தில் நான் மகிழ்ந்தால் போதும்
வசனமாம் வேலியாலே காக்கப்பட்டு
கறைதிறை அற்ற பரிசுத்தரோடு
ஏழையான் பொன் வீதியில் உலாவிடுவேன்.
நிறைவான ஜெய கோஷம் முழங்கும்போது
அன்பராம் இயேசுவோடு அகமகிழ்வேன்.
பொற்கீரிடம் சூட்டி நானும் புகழ்ந்திடுவேன்
ஒவ்வொரு காயங்களாய் முத்தம் செய்வேன்.
எந்தனின் பாக்கிய வீட்டை நினைக்கையிலே
வர்ணிக்க எந்தன் நாவு போதாதையா!
ஏழை என் ஆவல் என்று தீர்ந்திடுமோ?
ஆவலாய் ஏங்கிடுதே எனதுள்ளமும்!