இயேசு ராஜனை வாழ்த்திடுவோம்
இதயம் பொங்க நன்றியுடனே
போற்றி உயர்த்தி பணிந்திடுவோம்
அகிலம் பணிந்திட செய்தவரை
உயர்ந்த நாமம் பெற்று விளங்கும்
உன்னதர் அவரைப் போற்றிடுவோம் - இயேசு
உலகில் வந்த அருள் வடிவை
ஜீவ ஒளியாய் திகழும் அவரை
இன்றும் என்றும் துதித்திடுவோம் - இயேசு
தேவ மைந்தனாய் வந்தவரை
தேவ சுதராய் நாமும் விளங்க
கிருபை உருவைத் துதித்திடுவோம் - இயேசு
ஜெயித்து வென்று எழுந்தவரை
மகிமை சூழ திரும்பி வந்திடும்
வேந்தன் அவரைத் துதித்திடுவோம் - இயேசு