இன்பப் பேரொலி வானில் கேட்கின்றதே
ஏகமாய் தூதர்கள் சூழ்ந்திடவே
மணவாட்டியாம் நம்மை சேர்த்திடவே - இப்போ
மணவாளனாம் இயேசு வருகின்றாரே - இயேசு
நிச்சயம் அவரில் சேர்த்திடுவார்
உண்மையாய் அவரின் விசுவாசியை - அன்று
திண்ணமாய் நாமும் அறிந்திடுவோம் - இயேசு
தூக்கத்தினின்று எழும்பிடுவாய்
விண்ணினில் எக்காளம் தொனித்திடவே - இப்போ
வேகமாய் பறந்திட புறப்படுவோம் - இயேசு
தீவிரம் எண்ணெய் பெற்றிடுவீர்
விழிப்புடனே நாம் காத்திருப்போம் - மண
வாழ்வினில் அவருடன் மகிழ்ந்திடவே - இயேசு
சோராமல் புது பெலன் அடைந்திடுவோம்
பூலோக கவலைகள் முற்றிலும் ஒழிந்தே - நாம்
மேலோகம் சென்றிட புறப்படுவோம் - இயேசு
தொலைந்திடும் நேரம் நெருங்கிடுதே
மணவறை நேசர் மகிழச் செய்வார் - நம்மை
மார்பினில் சேர்த்து அணைத்திடுவார் - இயேசு