இன்றும் என்றும் எந்தன் ஜீவ பாதையில்
பாரிலே பாடுகள் மறந்து நான்
பாடுவேன் என் நேசரை நான் போற்றியே
உம்மை மாத்திரம் நோக்கி என்றும் ஜீவிப்பேன் அல்லேலூயா
வேதனையான வேளை வந்திடும்
என் மன பாரம் எல்லாம் மாறிடும்
தம் கிருபை என்றும் என்னை தாங்கிடும் - வாழ்த்துவேன்
நேசராய் இயேசென்னோடிருப்பதால்
மன்னவனாம் இயேசுவோடு சேருவேன் - வாழ்த்துவேன்
என்றும் என் கண்ணீரைத் துடைப்பாரே
இயேசுவோடு சேர்ந்து நித்தம் வாழுவேன் - வாழ்த்துவேன்