இயேசுவை காண ஆசை உண்டா
இயேசுவை காண ஆசைப்பட்டால்
காட்டுவார் அவர் பட்ட காயங்களை
இன்றும் அன்போடுன்னை அழைக்கின்றார்
உன்னுடைய பாவங்களை மன்னிப்பாரே
உன் பிரச்சினைகளையும் தீர்ப்பாரே
என்றும் தீர்ப்பாரே - இயேசுவை
நேசிக்கிறார் இயேசு நண்பராம் உம்மையும்
விசுவாசித்த அவன் நோய் நீங்கினதே
விசுவாசித்தால் காண்பாய் மகிமையை
தேவ மகிமையை - இயேசுவை
வருவாயா இயேசுவிடம் பாவகுஷ்டம் நீங்க
பணிந்தான் ஒருவன் இயேசுவின் பாதத்தில்
பணிந்து கொள்வாயா கூட்டத்தில்
இயேசு கூட்டத்தில் - இயேசுவை
எல்லா வேதனைக்கும் கல்வாரி உன் தஞ்சம்
நீ அறிவாயானால் இயேசுவை விடாய்
என்றும் கீழ்படிவாய் - இயேசுவை