- Song Book:
Spiritual Songs of Joy
ஆவிக்குரிய சந்தோஷக் கீதங்கள்
இயேசுவைப் போல் ஆகவும்
நேசரின் சாயலாகவும்
ஏழை நான் ஏக்கமுற்றேன்
இயேசுவின் மேல் ஏக்கமுற்றேன்
பாரினில் தேடினேன் பாசத்தை நாடினேன்
ஆயிரம் பேரில் சிறந்த இயேசுவே என்னை நேசித்தீர்
ஆவியால் நிறைந்திடவும் ஆவியில் களித்திடவும்
ஆவலாய் ஓடிவந்தேன் தாகத்தை தீர்த்திடுமே
இயேசுவே உம்மைப் போலவே யாருண்டு பாரினில்
அன்பிலே நிறைந்தென்றும் உம் சாயலாய் மாறுவேன்
வல்லமை பெற்றிடவும் கனிகளால் நிறைத்திடவும்
கிச்சிலி மர நிழலில் நேசரில் சார்ந்திடுவேன்
சாரோனின் ரோஜாவே பள்ளத்தாக்கின் லீலியே
வாசனை வீசவே நேசரே என்னோடிரும்