சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்
இது பரம சிலாக்கியமே
சிறகுகளால் மூடுவார்
அவர் சத்தியம் பரிசையும் கேடகமாம்
என் நம்பிக்கையும் அவரே - அவர்
இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும்
நான் பயப்படவேமாட்டேன் - அவர்
அது ஒரு காலத்தும் உன்னை அணுகிடாதே
உன் தேவன் உன் தாபரமே - அவர்
ஒரு வாதையும் உன் கூடாரத்தையே
அணுகாமலே காத்திடுவார் - அவர்
உன் பாதம் கல்லில் இடறாதபடி
தம் கரங்களில் ஏந்திடுவார் - அவர்
அவர் நாமத்தை நீ முற்றும் நம்பினதால்
உன்னை விடுவித்துக் காத்திடுவார் - அவர்
என்னை தப்புவித்தே முற்றும் இரட்சிப்பாரே
என் ஆத்தும நேசரவர் - அவர்