சர்வ வல்லவர் நிழல்தனிலே
தங்கி உறவாடி மகிழ்கின்றேன்
எங்கும் வெற்றி நான் காண்கின்றேன்
நான் நம்பும் கோட்டையும் அரணுமானார்
தப்புவித்து காப்பாற்றி தாங்குகிறார்
இறக்கையின் கீழே அமரச் செய்கின்றார்
சத்திய வசனம் எனது கேடகம்
நிச்சயம் நிச்சயம் விடுதலை உண்டு
பதினாயிரம் பேர் தாக்கினாலும்
பாதுகாப்பவர் என் பக்கத்திலே
பாதிப்பு இல்லையே பயமில்லையே
தமது தூதருக்கு கட்டளையிட்டார்
பாதம் கல்லிலே மோதாமலே
கைகளில் ஏந்திடுவார் தாங்கிடுவார்
சீறும் சர்ப்பங்களை மிதித்திடுவேன்
சாத்தானை காலடியில் நசுக்கிடுவார்
பகலின் பாழாக்கும் கொடிய வாதைக்கும்
பகலின் அம்புக்கும் பயப்படமாட்டேன்
உன்னதரை உறைவிடமாய் ஆக்கிக்கொண்டேன்
நோய்கள் அணுகாது என்றும் அணுகாது
தீமைகள் நேரிடாது நேரிடாது
தப்பாமல் விடுவித்து காப்பாற்றுவார்
அதிசயம் செய்து அரவணைப்பார்
துன்பத்தில் கூட துணை நிற்கின்றார்
தப்புவித்து உயர்த்தி கனப்படுத்துவார்
நீடிய ஆயுளால் நிறைவளிப்பார்