என் மேல் நீர் வைத்த பாசத்திற்காக
என் இயேசுவே! என் தேவனே!
உம்மில் நான் வளர்ந்திடவே
உம்மைப் போல என்றும் நான் நடக்க
உன்னத மாபெலன் ஈந்திடுமே! - உமக்காக
மாறாத கிருபை அளித்திடுமே
தினமும் உம் புகழை நான் கூறிட
தேவா உம் கிருபை ஈந்திடுமே! - உமக்காக
இயேசுவே எந்தன் தோழனாமே
இயேசு வண்டை என்னை ஒப்படைத்தேன்
கரம் பிடித்தென்னை நடத்திடுமே! - உமக்காக