உத்தம ஜீவியாய் உயர்த்த வேண்டுமே - 2
சித்தம் அறிந்து யான் செய்திட வேண்டுமே
- உம்
ஒர் நாளில் தூசியாய் ஒழிந்தே போய்விடும்
அந்தர வானமும் அகில பூமியும்
வெந்து உருகிப்போம் நீர் வரும் நாளிலே
மருள வைத்தெந்தனை மெருள விரட்டினும்
அணைத்து எடுத்துத்தம் அண்டையில் சேர்க்குமே
உலகத்தின் ஞானமும் என்னோடு சேருமோ
என்னோடு சேர்வதென் பாவமும் புண்ணியமே
உலகத்தின் மாயையில் அமிழ்ந்தழியாமல்
என்னை நடத்துவீர் என் இயேசு தேவனே