தற்பரனே நீர் நடத்தும்
என் சித்தமோ ஒன்றும் வேண்டாம்
என் பிரியனே என் இயேசுவே
மறு பிரயாண காலம் வரை
பரனே உந்தன் திரு சித்தத்தை
அறிவதல்லோ தூய வழி - உம்
வழி தவறா நடந்திடவே
வழி இதுவே என்று சொல்லும்
இனிய சத்தம் தொனித்திடட்டும் - உம்
அடியார் மீது ஜொலித்திடட்டும்
இரவு பகல் கூட நின்று
என்றென்றுமாய் நடந்திடுமே - உம்
கண்ணீரோ என் தண்ணீரமாய்
பருகிடினும் பயப்படேன் நான்
என்றென்றுமே சித்தம் போதும் - உம்
புண்ணியர் தேசம் காணும் வரை
பரதேசியாய் சஞ்சரிப்பேன்
பாரம் என்னைத் தாக்கிடாமல் - உம்