உயிர் தந்த தெய்வமே
உமக்காய் ஓடுவேன்
உயிருள்ள நாளெல்லாம்
தகப்பனே உமக்குத்தான்
உமது இரத்தத்தால் விலை கொடுத்து மீட்டீர்
நீர் படைத்தீர் வானம் பூமி அனைத்தும்
உம் பெயரைப் புகழ்ந்து பாடாதவன் யார்?
தேசம் அனைத்தும் இயேசு நாமம் சொல்லும்
மகிழ்ந்து புகழ்ந்து உம்மையே உயர்த்துவேன்
நீரே என்றென்றும் ஆளுகை செய்கின்றீர்
மாட்சிமை வல்லமை உமக்குத்தானே சொந்தம்