உத்தமரே உம் அன்பினால்
பாத்திரம் நிரம்பி வழியுதே
உன்னதத்தின் ஆவியினால்
மன்னவன் மார்பினிலே அல்லேலூயா
கரையில்லையே உம் அன்பிற்கே
கல்வாரி தரிசனம் தந்தீரே
கருணையாய் தேற்றினீரே - துதிப்பேன்
ஊற்றிடுவேன் உந்தன் பாதத்தில்
பொன்முகம் நோக்கிப் பார்த்துமே
பூரிப்பாய் வாழ்ந்திடுவேன் - துதிப்பேன்
அன்பென்னில் நெருக்கி ஏவுதே
ஊழியம் செய்ய தியாகமாய்
தந்தேன் உம் சேவை செய்ய - துதிப்பேன்