என்றென்றும் நான் பாடுவேன்
நீர் செய்த நன்மைக்கே
அதின் கீழுள்ள ஆகாயமும்
பூமியில் காண்கின்ற யாவும்
கர்த்தா, உம்மைப் போற்றுமே - எண்ணிலடங்கா
கடும் காற்றும் பனித் தூறலும்
நாட்டினில் வாழ்கின்ற யாவும்
நாதா, உம்மைப் போற்றுமே - எண்ணிலடங்கா
நிலத்தின் ஜீவ ராசியும்
பாரினில் பறக்கின்ற யாவும்
பரனே, உம்மைப் போற்றுமே - எண்ணிலடங்கா
வயதால் முதிர்ந்தோர்களும்
பாலகர் தம் வாயினாலும்
பாடி உம்மைப் போற்றுவார் - எண்ணிலடங்கா