எந்தன் உள்ளம் உருகிடுதே
நல்ல பங்கினை நான் அடைந்தேன் திருப்பாதம்
வல்ல பராபரனே சரணம்.
அன்பரே உம் பாதம் ஊற்றினாளே
என் இதயமாம் தைலக்குப்பியே
என்னை நொறுக்கி ஒப்படைத்தேன் - எந்தன்
நம்பிக்கை கன்மலை என் இறைவா
எந்தன் துணை நீர் என்னை அறிவீர்
எத்தன் பாரம் தாங்கிடுவீர் - எந்தன்
உம் முகமே எனக்காறுதலே
கைவிடாமல் காக்கும் கரமே
கண்கள் அதனை நோக்கிடுதே - எந்தன்
மேன்மைமிகும் அழைப்பை அளித்தீர்
அன்பு, தயவு, ஞானம் பொறுமை
இன்னும் கிருபை ஈந்தருளும் - எந்தன்
கூப்பிடும் வேளை செவி சாய்த்தீர்
இந்த உதவி என்றும் மறவேன்
இன்ப துதிகள் ஏறெடுப்பேன் - எந்தன்
எதுமில்லை இந்த பாரினிலே
உந்தனுடனே என்னை அறைந்தேன்
உந்தன் குருசில் பங்கடைந்தேன் - எந்தன்
இலாபமும் நஷ்மென்றெண்ணுகின்றேன்
ஓன்றே மனதில் உண்டு நினைவில்
சென்றே பரனைக் கண்டிடுவேன் - எந்தன்