மார்பில் சாய்ந்து சாய்ந்து
மகிழ்ந்து மகிழ்ந்திருப்பேன்
இரக்கத்தின் சிகரம்
பார்த்து பார்த்து ரசித்து ருசித்து
பரவசம் அடைவேன்
அமைதியின் மன்னன்
நினைத்து நினைத்து துதித்து துதித்து
நிம்மதி அடைவேன்
நாளும் பின் தொடர்வேன்
தோளில் அமர்ந்து கவலை மறந்து
தொடர்ந்து பயணம் செய்வேன்
அழைத்துச் செல்பவரே
ஆத்துமாவை தினமும் தேற்றி
அணைத்துக் கொள்பவரே