என் தேவனை என் கேடகம்
நான் நம்பின என் கோட்டையும்
என் துருகமும் நீரே
திருச்சித்தம் போல் நடத்தி
துர்ச்சனை பிரவாகத்தில்
தேற்றினீர் போற்றுவேனே
சதிமோச நாசங்களில்
சத்துருவின் பயங்களிலும்
சரணம் சரணம் மேசியாவே - என் மீட்பரே
தீமைகள் வெல்லுவேன் நான்
கனமகிமை யாவும் உமக்கே செலுத்துவேனே
உம்மாலே ஒருவனாக சேனைக்குள் பாய்ந்திடுவேன்
வாழ்நாள் எல்லாம் நீர் என் தஞ்சம்
வழிநடத்தும் மேசியாவே - என் மீட்பரே