தலையை நிமிரச் செய்பவரே - (2)
இன்று உமக்கு ஆராதனை
என்றும் உமக்கே ஆராதனை - (2)
எனக்கு பதில் நீர் தந்தீரையா - (2)
படுத்து உறங்கி விழித்தெழுவேன்
நீரே என்னைத் தாங்குகிறீர்
அப்பா அப்பா உங்களுக்குத்தான் - (2)
அஞ்ச மாட்டேன் அஞ்சவே மாட்டேன் - (2)
விடுதலை தரும் தெய்வம் நீரே
வெற்றிப் பாதையில் நடத்துகிறீர் - (2)
உமக்கென்று நீர் பிரித்தெடுத்தீர் - (2)
வேண்டும் போது செவிசாய்க்கின்றீர்
என்பதை நான் அறிந்துகொண்டேன் - (2)
மேலான மகிழ்ச்சி எனக்குத் தந்தீர் - (2)
நீர் ஒருவரே பாதுகாத்து
சுகமாய் வாழச் செய்கின்றீர் - (2)
உம்மோடுதான் நான் வாழ்ந்திடுவேன்
எனக்கு நன்மை செய்தபடியால்
நன்றிப் பாடல் பாடிடுவேன்