இயேசு இதோ வருகிறார் - வேகம்
மோசம்தான் அசதியாக ஜீவித்து வந்தால்
பின்பு அலறிடுவாயே இயேசு கைவிடும் போது -வேகம்
மேலோகம் பார்த்து பார்த்து லோகத்தை வெறு - இது
மாய லோகமே உன்னை மோசம் போக்குமே - வேகம்
பாரங்கள் உன்னைக் கீழே தள்ளி விடுமே - உந்தன்
இருதயத்தை நீ பரிசுத்த மாக்காயோ - வேகம்
மாமிச சுபாவத்தோடு நான் என்பதும் - உன்னை
மோசம் போக்குமே உந்தன் ஆசை அழியுமே - வேகம்
ஏறுவார் பரிசுத்தர் வேறு ரூபமாய் - அன்று
மேகம் ஏறிட நீயும் ஆயத்தம் தானா - வேகம்
பாடுவார் அல்லேலூயா ஆர்ப்பரிப்போடே - அப்போ
அங்கிருப்பாயோ பூவில் ஓடி ஒளிப்பாயோ - வேகம்
கோர அக்கினி பூமியில் சொரியும் வேளையில் - நீயும்
அகப்படாமலே இன்று தப்பிக் கொள்ளாயோ - வேகம்