கிருபையாய் யாவரும் பலப்படுவொம்
தீங்கு நாளிலே சாத்தானை ஏதிர்த்து நின்று
திராணியுடன் போர் புரிவோம்
சாத்தானின் சேனையை முறித்திடுவோம் - அவர்
சத்துவ வல்லமையால்
துரைத்தனம் அதிகாரம், அந்தகாரத்தின்
லோகாதிபதியோடும் பொல்லா ஆவியோடும்
போராட்டம் நமக்கு உண்டு - சர்வா
நீதியின் மார்க்கவசம் தரித்தே
சமாதானத்தின் கவிசேஷப் பாதரட்சை
நாம் கால்களில் தொடுத்துக் கொள்வோம் - சர்வா
வல்லமையோ டெதிர்க்கும் ஆயுதம்
வீரமுடன் பிடித்து நிற்போம் - சர்வா
எக்ஷணமும் அணிந்து கொள்ளுவோம்
தேவ வசனமென்னும் ஆவியின் பட்டயம்
தேவை அதைப் பிடித்துக் கொள்வோம் - சர்வா
வேண்டுதல்களோடும் விண்ணப்பத்தோடும்
பரிசுத்தர்கட்காகவே ஆவியினால்
மன உறுதியுடன் ஜெபிப்போம் - சர்வா