Song Book:
Spiritual Songs of Joy
ஆவிக்குரிய சந்தோஷக் கீதங்கள்
கர்த்தரைப் பாடியே போற்றிடுவோமே கருத்துடன் துதிப்போம் இனிய நாமமதை
கடலின் ஆழம்போல் கருணையோடிரக்கம் கரையில்லை அவரன்பு கறையற்றதே.
இயேசு நல்லவர் இயேசு வல்லவர் இயேசுவைப் போல் வேறொரு நேசரில்லையே
கொடுமையோர் சீறல் பெரு வெள்ளம்போல அடிக்கையில் மோதியே மதில்களின் மீதே
பெலனும் இவ்வேழைக்கும் எளியோர்க்கும் திடனாய் வெயிலுக்கு ஒதுங்கும் விண் நிழலுமானார் - இயேசு
போராட்டம் சோதனை நிந்தை அவமானம் கோரமாய் வந்தும் கிருபையில் நிலைக்க
தேவகுமாரனின் விசுவாசத்தாலே நான் ஜீவித்து சேவிக்க திடமளித்தார் - இயேசு
கல்லு முள்ளுகளுள்ள கடின பாதையிலே கலக்கங்கள் நெருக்கங்கள் அகமதை வருத்த
எல்லையில்லா எதிர் எமக்கு வந்தாலும் வல்லவர் இயேசு நம்முன் செல்கிறார் - இயேசு
சீயோனைச் சிறப்புடன் சேர்த்திட இயேசு சீக்கிரம் வரும் நாள் நெருங்கி வந்திடுதே
முகமுகமாகவே காண்போமே அவரை யுகயுகமாகவே வாழ்ந்திடுவோம் - இயேசு