தாழ்ச்சியடையேன் என்றுமே
அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து
அமர்ந்த தண்ணீரண்டை நடத்துகிறார்
ஆனந்தத்தால் நிறைக்கிறாரே
மகிமையின் நாமத்தினிமித்தம் அவர் தம்
நீதியின் பாதையில் நடத்துகிறார் - கர்த்தர்
எப்பெரும் தீங்குக்கும் அஞ்சேன்
கர்த்தர் என்னோடென்றும் இருப்பதாலே
அவர் கோலும் தடியும் என்னைத் தேற்றிடுமே - கர்த்தர்
பந்தியொன்றாயத்தம் செய்தார்
என்னைத் தம் எண்ணெயால் அபிஷேகித்து
என் பாத்திரம் நிரம்பியே வழியச் செய்தார் - கர்த்தர்
நன்மை கிருபை தொடரும்
கர்த்தரின் வீட்டில் நான் களிப்புடன் துதித்து
நித்திய நாட்களாய் நிலைத்திருப்பேன் - கர்த்தர்