கண்டித்து உணர்த்திப் போதிக்கிறீர்
எப்போதும் கூட இருக்கின்றீர்
சத்திய ஆவியானவரே
சாட்சியாய் வாழச் செய்பவரே
நினைவுட்டுகின்றீர் வசனங்களை
அனைத்தையும் சொல்லித் தருகின்ற
ஆலோசகர் நீர்தானையா
அர்ப்பண வாழ்வு நான் வாழ
மகிமை மேல் மகிமை தருகின்றீர்
மறுரூபம் ஆக்கி மகிழ்கின்றீர்
உலகெங்கும் தூது அனுப்புகிறீர்
நற்செய்தி அருளும் நாயகரே
உற்சாகப்படுத்தும் உன்னதரே
வரப்போகும் அனைத்தும் தெரிவிக்கிறீர்
எனையாண்டு நடத்தும் மணவாளரே
பெற்றுக் கொள்ள முடிவதில்லை
எங்களுக்குள் நீர் ஜீவிக்கின்றீர்
இதயத் துடிப்பாய் இயங்குகின்றீர்