கலக்கம் ஏன் மனமே?
கண்ணீர் ஏன் மனமே?
இனியும் நடத்திச் செல்வார்
எபிநேசர் அவர்தானே - (2)
கூட சென்றிடலாம்
பாடி மகிழ்ந்திடலாம்
காணாத பரலோகம்தான்
நமது குடியிருப்பு
மகிமையை கொண்டு வரும்
மறவாதே என் மனமே
தெரிந்துகொள் மனமே
சீடன் அவன் தானே
கிருபை விலகாதென்றார்
மனது உருகும் தெய்வம்