- Song Book:
Spiritual Songs of Joy
ஆவிக்குரிய சந்தோஷக் கீதங்கள்
கிறிஸ்தவ ஜீவியம் சௌபாக்கிய ஜீவியம்
கிறிஸ்துவின் மக்கட்கோர் ஆனந்த ஜீவியம்
கஷ்டங்கள் வந்தாலும் நஷ்டங்கள் நேர்ந்தாலும்
கிறிஸ்தேசு நாயகன் கூட்டாளி அல்லவோ
லௌகீக இன்பங்கள் மாறிப்போய் விடுமே
லௌகீகரெல்லாரும் கைவிடுவார் அல்லவோ
உற்றார் உறவினர் தள்ளி வெறுத்தாலும்
யோசேப்பின் தெய்வம் என் கூட்டாளி அல்லவோ
நம்பும் சகோதரர் வம்பு செய்திடுவார்
அப்பம் புசித்திட்டோர் குதிகாலைத் தூக்குவார்
ஆறாத்துயரிலும் மாறா கண்ணீரிலும்
ஆற்றிடும் தெய்வம் என் கூட்டாளி அல்லவோ
காரிருள் பாரினில் படர்ந்திடும் வேளையில்
இராஜாக்கள் நேதாக்கள் சத்ருக்கள் ஆகையில்
அக்னி கடலிலும் சிங்கக் குகையிலும்
தானியேலின் தெய்வம் என் கூட்டாளி அல்லவோ
இயேசு என் நல்மேய்ப்பர் இயேசு என் சிநேகிதர்
நித்தியனாம் இராஜா என் கூட்டாளி அல்லவோ
என்ன இப்பாரங்கள் என்ன இக்கிலேசங்கள்
என் இயேசு ராஜா என் கூட்டாளி அல்லவோ
காகள நாதம் நான் கேட்டிடும் வேளையே
கஷ்டங்கள் யாவுமே நீங்கிடும் நேரமே
எப்போ நீர் வருவீர் என்று நீர் வருவீர்
என் கண்ணீர் துடைக்க நேசக் கூட்டாளியே