அதிவிரைவில் தோன்றிடுமே
அதுவரை இருக்கும் துன்பம் இல்லை
பின்பு என்றுமே ஆனந்தம்
யுத்தம் செய்திடுவார் நன்று
அவர் ஆவியினால் புது பெலனடைந்து
ஜெயகீதங்கள் பாடிடுவோம் – குதூகலம்
என்று காண்போம் என ஏங்கும்
நாம் மகிழ்ந்திடவே அவர் வந்திடுவார்
மணவாட்டியாய் மாறிடுவோம் – குதூகலம்
அவர் வருகையை எதிர்நோக்கி
நவ எருசலேமாய் தூயநகராமதாய்
நாம் இணைந்திடுவோம் அவரில் – குதூகலம்
சீயோன் நகர்தனிலே சேர்க்க
அருள் தந்துவிட்டார் நாமம் வரைந்துவிட்டார்
தேவ மகிமையால் ஆர்ப்பரிப்போம் – குதூகலம்
தேவ காகளம் தொனித்திடவே
தேவ மகிமையினால் மறுரூபமுடன்
சீயோன் நகரத்தில் சேர்ந்திடுவோம்