உம்மாலே எல்லாம் கூடும்
கூடாதது ஒன்றுமில்லை உம்மால்
கூடாதது ஒன்றுமில்லை
சாத்தானை ஒடுக்கினீரே சர்வ வல்லவரே
யோர்தான் உம்மைக் கண்டு பின்னோக்கிச் சென்றது ஏன்
மறுபடி வருவீரையா உருமாற்றம் தருவீரையா
உம் பெயரால் கைகள் நீட்டினால் நோய்கள் மறையுதையா
குன்றுகள் ஆடுகள் போல் குதித்ததும் ஏன் ஐயா
கற்பாறை கன்மலையை நீரூற்றாய் மாற்றினீரே
கரையும் காகங்களுக்கு இரை கொடுத்து மகிழ்கிறீர்
இரவை ஆள்வதற்கு விண்மீனை உருவாக்கினீர்