Song Book:
Spiritual Songs of Joy
ஆவிக்குரிய சந்தோஷக் கீதங்கள்
சத்தியமும் ஜீவனுமாய் நித்தமுமே வாழ்ந்திடும் கர்த்தனே எங்கட்கு கரம் தந்து என்றும் தாங்கிடும்
சுத்தமாய் நடப்பதற்கு சுத்த ஆவி தந்திடும் சித்தமோடு இந்த வேளை வந்திறங்கிடும்
வானந் திறந்தருளும் பல தானங்களை இந்நேரமதில் வானவனே ஞானமுள்ள வல்ல குருநாதனே தேனிலும் மதுரம் திவ்ய ஆசிர்வதாங்கள்
என்னை முற்றும் மாற்றிட உன்னத பெலனூற்றிடும் இன்னும் இன்னும் ஈசனேயும் நல்வரங்களீந்திடும்
கண்ணிகளில் சிக்கிடாமல் கண்மணி போல் காத்திடும் கன்மலையும் மீட்பரும் என் காவலும் நீரே - வானம்
சுயம் ஆடம்பரம் முற்றும் சுட்டெரிக்க வேண்டுமே தயவு தாழ்மையினாவி தந்தருள வேண்டுமே
மாயமான யாவினின்றும் மனமதைப் பேணுமே ஆயனே அடியார்களின் அடைக்கலமே - வானம்
அதிகமதிக அன்பில் அமிழ்ந்து அனுதினம் புதிய நாவுகளாலும் புகழ்ந்தும்மைப் போற்றிட
அதிசயமே அகத்தின் குறைகள் அகற்றியே இதுசமய முன்னத பெலனீந்திடும் - வானம்