ஜனங்களே எல்லோரும் அவரைப் போற்றுங்கள் - (2)
அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது - (2)
அவரது இரக்கம் என்றும் உள்ளது
தேவையான அனைத்தையும் மிகுதியாய்த் தருவார் - (2)
கடன் வாங்காமல் வாழச் செய்திடுவார்
முடிவில்லா வாழ்வு நமக்குத் தந்திடுவார் - (2)
ஒருநாளும் அழிந்து போக விடமாட்டார்
இன்னல்கள் நடுவிலே மறைவிடமானார் - (2)
வெற்றிக் கொடி அசைத்து ஆட வைக்கின்றார்
நாம் வாழ இயேசுவை நமக்குத் தந்தாரே - (2)
அருள்வார் என்பது நிச்சயம் தானே
உணவையும் தண்ணீரையும் மிகுதியாய்த் தந்திடுவார் - (2)
குழந்தைப் பாக்கியமும் கொடுத்திடுவார்