சேதமின்றி நம்மைக் காப்பவரே
சோர்ந்திடும் நேரங்கள் தேற்றிடும் வாக்குகள்
சோதனை வென்றிட தந்தருள்வார்
திக்கற்ற மக்களின் மறைவிடம்
பக்க பலம் பாதுகாப்பும்
இக்கட்டில் இயேசுவே அடைக்கலம்
உள்ளத்தின் உறுதி அசையாதே
ஏழு மடங்கு நெருப்பு நடுவிலும்
இயேசு நம்மோடங்கு நடக்கின்றார் - எக்காலத்தும்
ஆத்திரமாய் வந்து தப்புவிப்பார்
கப்பலின் பின்னணி நித்திரை செய்திடும்
கர்த்தர் நம்மோடுண்டு கவலை ஏன் - எக்காலத்தும்
கர்த்தரின் அற்புதம் கண்டிடுவோம்
தேவனின் அன்பில் நிலைத்திருப்போம் - எக்காலத்தும்
ஏற்றிடுவோம் என்றும் ஜெயக்கொடி
இயேசுவை சந்தித்து ஆனந்திப்போம் - எக்காலத்தும்