விசுவாசக் கண்ணால் காண்கிறோம்
நம் பிதா அழைக்கும் பொழுது
நாம் அங்கே வசிக்கச் செல்லுவோம்.
இன்பராய் ஈற்றிலே மோட்சக் கரையில் நாம் சந்திப்போம்
விண்ணோர் கீதங்களைப் பாடுவோம்
துக்கம் யாவும் அற்று மகிழ்ந்து
சுத்தரில் ஆறுதல் அடைவோம் - இன்ப
அவரில் மகிழ்ந்து பூரிப்போம்
மீட்பின் நன்மைகளை உணர்ந்து
அவரை வணங்கித் துதிப்போம் - இன்ப
வான் சேனையுடன் நாம் களிப்போம்
நம் தொல்லை யாத்திரை முடித்து
விண் கிரீடத்தை நாம் தரிப்போம் - இன்ப
ஆளுகை செய்து வீற்றிருப்பார்
துக்கம் நோய் சாவுகள் நீங்கிடும்
தேவன் நம் கண்ணீரைத் துடைப்பார் - இன்ப
சந்திப்போம், ஆடுவோம், ஆளுவோம்
துக்கம் நோவழிந்த ஸ்தலத்தில்
ஷேமமாய் நாம் இளைப்பாறுவோம் - இன்ப
கேட்டு நாம் யாவரும் மகிழ்வோம்
பக்தர் அங்கே முடி சூடுவார்
ஒர் முடி அங்குண்டு எனக்கும் - இன்ப
ஆயின் நான் மீளவும் சந்திப்பேன்
அவர் கூட்டத்தில் நான் விண்ணிலே
ஓய்வற்ற பேரின்பம் கொள்ளுவேன் - இன்ப
என்று நல் மீட்பர் அழைக்கிறார்
மாந்தர் யாவருக்கும் இடமுண்டு
எல்லோரும் வாருங்கள் என்கிறார் - இன்ப