அழுகுரல் கேட்டீரையா – (2)
குனிந்து தூக்கினீர் பெரியவனாக்கினீர்
உமது காருண்யத்தால் – (2)
உமது காருண்யத்தால் பெரியவனாக்கினீரே – (2)
இரவைப் பகலாக்கினீர் – (2)
எரிந்து கொண்டிருப்பேன் எப்போதும் உமக்காய்
என் ஜீவன் பிரியும் வரை – (2)
என் ஜீவன் பிரியும் வரை எரிந்து கொண்டேயிருப்பேன் – (2)
நீர்தான் நீர்தானையா – (2)
தூயவர் தூயவர் துதிக்குப் பாத்திரர்
ஆறுதல் நீர்தானையா – (2)
ஆறுதல் நீர்தானையா துதிக்குப் பாத்திரரே – (2)
மதிலைத் தாண்டிடுவேன் – (2)
புகழ்ந்து பாடுவேன் உம்மையே உயர்த்துவேன்
உயிர் வாழும் நாட்களெல்லாம் – (2)
உயிர் வாழும் நாட்களெல்லாம் உம்மையே உயர்த்திடுவேன்