அவரே நம் தெய்வம்
எல்லாமே அவரிலிருந்து வந்தன
நாமோ அவருக்காக வாழ்ந்திடுவோம்
தேவைகளை அறிந்த நல்ல தந்தை இவர்
உணவு ஊட்டுகிறார் உடையும் உடுத்துகிறார்
ஊருவாக்கி மகிழ்கின்றார் ஒவ்வோரு நாளும்
கேட்பதை கொடுத்திடுவார்
தட்டும்போது திறந்திடுவார்
ஆறுதல் அனைத்திற்கும் ஊற்று அவர்
கணவனை இழந்தவர்க்கு காப்பாளர் அவர்தானே
எகிப்தில் இருந்து என்னை அழைத்துக்கொண்டார்
கரங்கள் பிடித்துக்கொண்டு நடக்கப் பழக்குகிறார்
பாசக் கயிறுகளால் பிணைத்துக்கொண்டார்
நுகத்தை அகற்றிவிட்டார் ஜெயத்தை தந்துவிட்டார்
எல்லாமே உம்மிடம் இருந்து வந்தன
எந்நாளும் உமக்குத்தானே ஆராதனை
எகிப்தில் இருந்து என்னை அழைத்துக்கொண்டீர்
கரங்கள் பிடித்துக் கொண்டு நடக்கப் பழக்குகிறீர்
ஆறுதல் அனைத்திற்கும் ஊற்று நீரே
கணவனை இழந்தவர்க்கு காப்பாளர் நீர்தானைய்யா
உருவாக்கி மகிழ்கின்றீர் ஒவ்வொரு நாளும்
கேட்பதை கொடுத்திடுவீர் தட்டும்போது திறந்திடுவீர்
பரிவு என்னும் கயிறுகளால் பிணைத்துக் கொண்டீர்
நுகத்தை அகற்றிவிட்டீர் ஜெயத்தை தந்துவிட்டீர்